Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
9. மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பம் குறித்து ஐந்து வரிகள் எழுதுக.பல்லவர் காலத்தின் மிகப்பெரிய கலைச்சின்னம் மாமல்லபுரமாகும். கற்களை அடுக்கிக் கட்டாமல் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்ட கோயில்களையும் ரதங்களையும் இங்குக் காணலாம். பகீரதன் கங்கையாற்றை நில உலகிற்குக் கொண்டுவந்ததைக் குறிக்கும் சிற்பம், கல்யானைச் சிற்பம் ஆகியன காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்வன.
