தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    குண்டலகேசியின் கதையைக் கூறுக.

    பத்திரை என்பவள் தன் மாளிகையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்து தெருவிற்குச் சென்று விடுகிறது. அப்போது அரண்மனைச் சேவகர்கள் காளன் என்ற குற்றவாளியைக் கொலைத் தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்வதைப் பத்திரை பார்க்கிறாள். பத்திரை காளன் மீது காதல் கொள்கிறாள். அவனை விடுவித்து மணந்து கொள்கிறாள். விளையாட்டாக அவனை ஒரு நாள் நீ கள்வன் அல்லவா எனக் கேட்க, அவன் சினம் கொண்டு அவளை மலையுச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். பத்திரை அவனை வணங்குவது போல் காட்டி, மலையுச்சியிலிருந்து அவனைத் தள்ளிக் கொன்று விடுகிறாள். பத்திரை இறுதியில் பௌத்தம் சார்ந்து குண்டகேசியாகிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:42:39(இந்திய நேரம்)