Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.வளையாபதி குண்டலகேசி கற்பிக்கும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
சமயங்கள் தமிழர் வாழ்வில் மதிப்புப் பெற்றன. புண்ணியம், பாவம் பற்றிய கருத்துகள் தமிழரிடம் வேர் கொண்டன. தருக்கம் செய்து கருத்துகளை நிறுவும் போக்கு வளர்ந்தது. நிலையாமை எண்ணம் வலிமை பெற்றது. அரசர் குலத்தையே கதைக்குரியதாய் ஆக்கும் நிலை மாறியது. பெண்களும் துறவேற்கும் நெறி தோன்றியது. இவையே வளையாபதி குண்டலகேசியால் கற்பிக்கப் பெறும் பண்பாட்டுக் கூறுகளாகும்.
