தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    சிலப்பதிகாரம் ஒரு பேரிலக்கியம். அது பெண்ணைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது. கண்ணகியை வேந்தர்கள் தொழுது போற்றும் கற்புத் தெய்வமாகக் காட்டியது. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் பெண்ணை அப்படிப் பார்த்தனவா? இல்லை! அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் வாழ்க்கையின் குறிக்கோள் என்று பேரிலக்கியங்கள் முழங்கின. சிற்றிலக்கியங்கள் அப்படிக் கூறினவா? இல்லை! காலச் சூழல் கோவை, உலா, அந்தாதி, தூது போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்ற இடம் தந்தன. இந்த இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டு நிலையைக் காண்போமா?



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:01:55(இந்திய நேரம்)