தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.6 தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை

    தமிழர் அல்லாத பிறர், தமிழகத்திற்குள் புகுந்து ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், அவர்தம் பண்பாட்டுக் கூறுகளும், மொழி வழக்குகளும், தமிழர் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்திவிட்டன. தெலுங்குச் சொற்களும், உருதுச் சொற்களும், தமிழ்ச் செய்யுட்களிலேயே இடம்பெற்று விட்டன. கடவுள் வழிபாட்டு நெறிகளில் பல புதிய வழக்கங்கள் தோன்றின. பண்பாட்டு நிலையில், உயர் பண்புகள் என்று போற்றப்பட்டவை மதிப்பு இழந்து சடங்குகள் மதிப்புப் பெறத் தொடங்கிவிட்டன. இவற்றைச் சிற்றிலக்கியங்கள் காட்டுகின்றன.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1. திருமடங்கள் செய்த பணிகள் யாவை?

    2. சிற்றிலக்கியங்கள் யார் மீது எதற்காகப் பாடப் பெற்றன?

    3. மதுரை நாட்டு மக்கள் குறித்து மார்ட்டின் பாதிரியார் கூறுவது யாது?

    4. சிறு தெய்வங்கள் பற்றிக் கூறுக.

    5. சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாட்டுக் குறைபாடுகளை எழுதுக.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:02:14(இந்திய நேரம்)