Primary tabs
-
3.5 தொகுப்புரை
நல்லியக்கோடனிடம் பரிசு பெற்று வந்த சிறுபாணன் பரிசு பெற விரும்பும் சிறுபாணனிடம் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பை வியந்து கூறுகிறான். அவனது கொடைத்திறம் சேர, சோழ, பாண்டியர்களின் கொடையைக் காட்டிலும் மேலானது; கடையெழு வள்ளல்களின் அருங்கொடையை விட உயர்ந்தது என்று மகிழ்ந்து கூறுகிறான்.
"உன்னைப் போல் நானும் வறுமையில் வாடினேன்; செய்வது தெரியாமல் விழித்தேன். நல்லியக்கோடனிடம் சென்று பரிசு பெற்றமையால் என் வறுமைத் துன்பம் முற்றிலும் நீங்கியது. எனவே, நீயும் அவ்வள்ளலிடம் சென்று பரிசு பெற்று, துயர் நீங்குவாயாக" என்று பரிசு பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனை வழிப்படுத்துகிறான்.