Primary tabs
-
பாடம் - 6
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது கபிலர் பாடியதாகும். இப்பாடம் இப்பத்துப் பாடல்களின் கருத்தைத் திரட்டி மொழிகின்றது.
இப்பாடம், பாடல்களின் துறை, வண்ணம், தூக்கு, பெயர் குறித்த விளக்கங்களைக் கூறுகின்றது.
இப்பத்திற்குரிய பதிகம், மற்றும் சான்றுகளின் வழியே வாழியாதன், கபிலர் குறித்த செய்திகளையும் இப்பாடம் அளிக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?கபிலர், வாழியாதன், பாரி ஆகியோரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இப்பாடத்தைப் படிப்பதன் வழியே பெறப்படும்.
பதிற்றுப்பத்தின் நடைச் சிறப்பு, சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்தின் தனித்தன்மை ஆகியவை குறித்து இப்பாட வழி அறியலாம்.
சங்க காலப் போர்முறை, வீரப் பண்பு, வேந்தர்களின் கொடை மற்றும் சமுதாய நிலை பற்றிய அறிவை இப்பாடம் படிப்பதன் வழியாகப் பெறக் கூடும்.