Primary tabs
செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடையிற் சிறந்தவன்; “ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்” என அவன் வள்ளல் தன்மை கூறப்பெறும். அவனைப் பகைத்த நாடுகள் வளம் இழக்கும். அவனைப் பணிந்து திறை செலுத்துவோர் நாடு வளம் கொழிக்கும். நிலம் பெயர்ந்தாலும் வாழியாதன் சொன்ன சொல் மாறாதவன்.
அந்தணர்கள் வேண்டுவன கொடுத்த செம்மல் அவன். பாணரும் பரிசிலரும் மகிழப் பெரும் பரிசில்கள் அளிப்பவன் அப்பெருமகன். அவன் தனது இல்லத்திலிருந்து நீங்கிப் பல நாட்கள் போர்க்களத்தில் கழிப்பவன். இவ்வாறு அவன் சிறப்புகள் கபிலரால் இப்பத்தில் போற்றப் பெறுகின்றன. அழகிய தொடர்களால் பாடலுக்குப் பெயர் சூட்டுவது பதிற்றுப்பத்தின் தனிச் சிறப்பு. இது, கவிதையைச் சுவைப்பதில் அன்றைய பெருமக்களுக்கு இருந்த ஈடுபாட்டின் அடையாளமாக விளங்குகிறது.
1. கபிலர் செல்வக்கடுங்கோவிடம் பாரி பற்றிக் கூறுவன யாவை?2. சேரனுக்குத் திறை செலுத்தியோர் நாடு பெறும் பெருமைகளை ‘வரைபோல் இஞ்சி’ வழிநின்று காட்டுக.3. சேரனைப் பாடிச்சென்றால் பாணன் பரிசிலாகப் பெறும் அணிகலன்கள் எவை?4. 'ஏம வாழ்க்கை' என்பதன் பொருள் யாது?