தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-II
    4.
    விளக்கம் தருக.
    • சென்றுழிக் கலங்கல்

        தலைவன் ஒருவழித் தணத்தலாகப்    பிரிந்து சென்றபோது அப்பிரிவைத் தாங்க இயலாத தலைவி மனம் கலங்கிப் பேசுதல் சென்றுழிக் கலங்கல் எனப்படும்.

    • வந்துழி நொந்துரை

        ஒருவழித் தணத்தலாகிய தற்காலிகப் பிரிவு முடிந்து, திரும்பிவந்த தலைவனிடம் தோழி வருந்திப் பேசுதலும், அவ்வாறே தலைவிக்கும் தோழிக்கும் தன் பிரிவால் ஏற்பட்ட துன்பம் பற்றித் தலைவன் வருந்திப் பேசுதலும் வந்துழி நொந்துரை எனப்படும்.

    • வன்புறை

        தலைவனது பிரிவு தேவையானது; அப்பிரிவை ஏற்றுப் பொறுத்து ஆற்றியிருத்தலே பொருத்தமுடையது என்று தோழி தலைவியிடம் வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.

    • வன்பொறை

        தோழியின் வன்புறை அறிவுரைகளைக் கேட்ட தலைவி, தலைவனது பிரிவால் ஏற்பட்ட துயரத்தைப் பொறுத்துத் தாங்கிக் கொண்டு இருப்பாள். தலைவியின் மெல்லிய இயல்புக்கு மாறான அம் மனஉறுதி - ‘வன்பொறை’ எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 11:43:43(இந்திய நேரம்)