தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.5
    தொகுப்புரை

        இப்பாடப் பகுதியிலிருந்து கீழ்க்காணும் செய்திகளை உணர்ந்து தெளிந்தோம்.

    1. வரைதல் வேட்கை எனப்படும திருமண, விருப்பமும் அதற்கான காரணமும்.

    2. திருமணத்திற்கான பொருள் ஈட்டுதல் காரணமாகத்
      தலைவன் மேற்கொள்ளும் பிரிவு.

    3. தலைவனது பிரிவைப் பொறுத்துக்கொள்ள இயலாத
      தலைவியின் மென்மையான உளப்பாங்கு.

    4. தலைவியைப் போலவே, தலைவனும், பிரிவைத் தாங்காது
      பிரிவிலும்,     மீண்டு வரும் போதும் அவளையே
      நினைத்திருந்த உயர் மனப்பாங்கு.

    5. தலைவன் தலைவி இருவரையும் நெறிப்படுத்தி
      உரையாடும் தோழியின் மதிநுட்பம் மிக்க செயல்பாடு.

    இத்தகைய செய்திகளைக் கற்றுணர்வதன் மூலம் தலைமக்கள்
    களவு வாழ்க்கையில் உயர்ந்த உள்ளம் உடையவர்களாகத்
    திகழ்ந்தமையை அறிய முடிகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள்-II
    1.
    ஒரு வழித் தணத்தல் என்றால் என்ன?

    2.
    ஒரு வழித் தணத்தலின் வகைகளை எழுதுக.

    3.
    வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்
    என்றால் என்ன?

    4.
    விளக்கம் தருக. (1) சென்றுழிக் கலங்கல்
    (2) வந்துழி நொந்துரை (3) வன்புறை
    (4) வன்பொறை

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 17:21:41(இந்திய நேரம்)