தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.8 தொகுப்புரை

    இதுகாறும் இப்பாடத்தில் இலேச அணி, நிரல்நிறை அணி, ஆர்வமொழி அணி, சுவை அணி, தன்மேம்பாட்டு உரை அணி, பரியாய அணி, சமாகித அணி ஆகிய ஏழு அணிகளின் இலக்கணங்களை விளக்கமாகப் பார்த்தோம். அவற்றுள் சிலவற்றின் சில வகைகளுக்கான இலக்கணங்களையும் அறிந்தோம். எடுத்துக்காட்டுப் பாடல்களில் இவ்வணிகள் அமைந்து கிடைப்பதைத் தெளிவாக அறிந்தோம். தண்டி அலங்காரத்தில் கூறப்படாத, ஆனால் பெருவழக்கில் சொல்லப்படும் வஞ்சப்புகழ்ச்சி அணி, இலேச அணியில் அடங்கும் என்பதைப் புரிந்து கொண்டோம். நிரல்நிறை அணியும், தன்மேம்பாட்டு உரை அணியும் சொல், பொருள் இலக்கணங்களில் வேறு பெயர்களில் வழங்குவதையும் அறிந்தோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1

    சுவை அணியின் இலக்கணம் யாது?

    2

    எண்வகைச் சுவைகள் யாவை?

    3

    தன்மேம்பாட்டு உரை அணி என்றால் என்ன?

    4

    தன்மேம்பாட்டு உரை அணி தொல்காப்பியப் புறப்பொருள் இலக்கணத்தில் எந்தத் துறைகளாகக் கூறப்படுகிறது?

    5

    பரியாய அணியின் இலக்கணம் யாது?

    6

    பரியாய அணிக்கும், ஒட்டு அணிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பிடுக.

    7

    சமாகித அணியின் இலக்கணத்தை எழுதுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 12:07:09(இந்திய நேரம்)