தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.5 தொகுப்புரை

        தமிழ்ச் சிறுகதைப் படைப்பில் ஜெயகாந்தனின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புடையது. மேலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கினிப் பிரவேசம் சிறுகதை எழுப்பி விட்ட விமர்சன அலைகள், அந்தக் கதையின் தொடர்ச்சியாக வெளிவந்த சில நேரங்களில சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் என்ற இருபெரும் மகத்தான நாவல்களின் பிறப்பிற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த இலக்கிய அனுபவம் ஜெயகாந்தனுக்கு ஏற்பட்டது போல் வேறு எந்த எழுத்தாளருக்கும் ஏற்படவில்லை. மொத்தத்தில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஜெயகாந்தன் பதித்துள்ள தடம் ஆழமானதும் அகலமானதும், தனித்துவம் வாய்ந்ததும் சிறப்பானதும் ஆகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    இரு நாவல்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஜெயகாந்தனின் சிறுகதை எது?
    2.
    பெண் விடுதலை பேசும் சிறுகதை ஒன்றின் பெயரினைக் குறிப்பிடுக.
    3.
    ‘யுகசந்தி’ கதையின் கதைக்கரு யாது?
    4.
    பணத்தின் ஆதிக்கம் பற்றிப் பேசும் கதை ஒன்றின் பெயரினைக் கூறுக.
    5.
    ஜெயகாந்தன் ‘கதை கதைக்காகவே’ என்ற கோட்பாடு உடையவரா? அல்லது ‘கதை வாழ்க்கைக்காக’ என்ற கோட்பாடு உடையவரா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:04:22(இந்திய நேரம்)