Primary tabs
- 1.0 பாட முன்னுரை
இக்கால இலக்கிய வகைகளுள் ஒன்று சிறுகதை இலக்கியம். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் வாயிலாகச் சிறுகதை இலக்கியம் மக்களைச் சென்றடைகிறது. வாழ்க்கையில் உள்ளதைச் சொல்வது சிறுகதை. வேறுபட்ட பல மனிதர்களின் பலவகை அனுபவங்களைத் தெரிவிப்பது. மனித மனங்களின் உணர்வுகளைக் கலை நயத்துடன் உள்ளம் தொடச் சொல்வது சிறந்த சிறுகதையாகும்.
தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆர்.சூடாமணி. அவரது சிறுகதைகளைப் பற்றி இப்பாடம் கூறுகிறது.