தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

    தமிழ் நாடக வளர்ச்சி நிலைகளை இதன் பின்னர் பல பாடங்களில் அறிய இருக்கின்றோம். எனவே இந்த அளவில் நிறுத்திக்கொண்டு முடிவுரையாகச் சில செய்திகளை அறிவோம்.

    விளையாட்டு உணர்ச்சியும், போலச்செய்தல் உணர்ச்சியும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. எனவே, ஒரே கால கட்டத்தில் நாடக உணர்ச்சி அனைத்து நாடுகளிலும் உருவாகி இருக்க வேண்டும்.

    சமயச் சடங்கிலிருந்தும், மகிழ்வு உணர்ச்சியிலிருந்தும் நாடகம் உருவாகி இருக்க வேண்டும்.

    பொதுவாகப் பல நாடுகளில் நாடகம் தெய்வத் தொடர்புடையதாகவே இருக்கிறது.

    இசைப்பாட்டும், நடனமும் நாடகத் தோற்றத்திற்கு முன்னோடிகளாக இருந்திருக்கலாம்.
     

    1)
    எகிப்து நாட்டில் முதன் முதலில் நாடகம் வடிவமைக்கப்பட்டது எனக் கூறிய நாடக ஆய்வாளர் பெயர் என்ன?
    2)
    கிரேக்கத்தில் நாடகக் கலையைத் தோற்றுவித்த மதவிழா நடனம் எது?
    3)
    நாட்டியத்திலிருந்து நாடகம் தோன்றியது எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள் பெயர் என்ன?
    4)
    நான்முகன் தேவர்களுக்காக உருவாக்கிய நாடகத்தின் பெயர் என்ன?
    5)
    அசாம் மாநிலத்தில் வழங்கும் இசை நடனத்தின் பெயர் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2018 18:32:21(இந்திய நேரம்)