தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 2)
    தும்பை ஆடுதல் என்னும் புறத்துறையை விளக்குக.

    தும்பை ஆடுதல் (624).

    போருக்குச் செல்லும் போது வீரர்கள் வெற்றி உண்டாக வேண்டும் என்று தும்பைப் பூ மாலையைச் சூடிப் போருக்குச் செல்லுவர். இதைப் புறப்பொருள் வெண்பாமாலை என்ற புறப்பொருள் இலக்கண நூல் கூறுகிறது.

    வீரபத்திரக் கடவுள்தக்கனுடன் போருக்குச் செல்லும்போது போர்க்கோலம் கொள்ளும் காட்சியைக் காளிக்குக் கூளி கூறுகிறது. அதில்

    பொதியில் வாழ் முனிபுங்கவன் திருவாய் மலர்ந்த புராணநூல் விதியினால் வரும் தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே - (624)

    என்று வீரபத்திரர் போருக்குப் போகும் போது தும்பை மாலையைச் சூடிச் சென்றார் என்று ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 18:37:07(இந்திய நேரம்)