இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
13-ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சிறந்த அகப்பொருள் இலக்கியம்
தஞ்சைவாணன் கோவை என்பதை அறியலாம்.
ஓர்
அகப்பொருள் கோவை இலக்கியம் எப்படி எழுதப்படும் என்பதை அறிந்து
கொள்ளலாம்.
அகப்பொருள்
மரபுகளாகிய தலைவன் தலைவியின் அகஒழுக்கங்கள் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
அகஇலக்கியத்திற்கே
உரிய உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
நூலாசிரியர்
பொய்யாமொழிப் புலவரைப் பற்றியும் அவரது இலக்கியத் திறன் பற்றியும்
அறிந்து கொள்ளலாம்.
பாட்டுடைத்
தலைவனாகிய தஞ்சைவாணன் என்கிற சந்திரவாணனுடைய வீரச்சிறப்பு,
கொடைச்சிறப்பு, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றையும், அவன் தமிழ்
வளர்த்த தன்மையையும் விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
அவனுடைய மாறை
என்ற நாட்டின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும் அறிந்து
கொள்ளலாம்.