Primary tabs
-
3)படைவழக்கு என்றால் என்ன?
அரசர்கள் வீரர்களுக்குப் படைக்கலங்களை வழங்குவது படைவழக்கு எனப்படும். (புறப்பொருள் வெண்பாமாலை) இந்நூலில் வீரபத்திரர் போர்க்கோலம் பூண்டு புறப்படும் போது அவர் கையில் அம்பு கொடுக்கப்படுகிறது. எனவே இது படைவழக்கு என்ற புறத்துறையைச் சேர்ந்தது ஆகும்.
புரங்கொல் அம்புகொல், வந்து வந்து இடை
போனபேர் புராணர் பொற்
சிரம்கொல் அம்புகொல் என்கொல் ஒன்று
வலத்திருக்கை திரிக்கவே