Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
6)
‘வில்லிபுத்தூரார்’ பற்றிக் குறிப்பிடுக.வில்லிபுத்தூராழ்வார் தமிழில் மகாபாரதம் பாடிய ஒரு மகாகவி. வைணவர்; அந்தணர். திருமுனைப்பாடி நாட்டில் ‘வக்கபாகை’ - இராசதானியை ஆண்டு வந்த வரபதியாட்கொண்டான் எனும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். இவர் மகாபாரதம் தவிர, வேறு நூலெதுவும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாருக்கு ‘வில்லிபுத்தூராழ்வார்’ என்று ஒரு பெயர் உண்டு. இப்பெயரையே இவர் பெற்றோர் தம் மகனுக்கு இட்டனர். இவர் அதிகமான வடசொற்களைத் தம்நூலில் கையாண்டுள்ளார்.