Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
மாலைப் பொழுதின் வருணனையை வில்லிபுத்தூரார் எங்ஙனம் விளக்கியுள்ளார்?மாலைக் காலத்தில் குவிந்த தாமரைத் தொகுதிகள் பகல் பொழுது முழுவதும் உக்கிரமாக எழும் சூரியனொளி, நீரில் வாழும் தெய்வ மகளிர் மேல் படாதபடி பரப்பப்பட்டிருந்தது. அப்பகல் பொழுது ஒடுங்கிவிட்டதென்ற காரணத்தால், வரிசையாக மடக்கப்பட்ட, அழகிய மென்மையான பட்டுக் குடைகளைப் போன்று இருந்தன என வருணித்துள்ளார்.