Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.வெட்சியும் கரந்தையும் குறித்து விளக்குக.வெட்சித் திணையின் ஒரு பகுதியாகவே கரந்தையைக் கூறுவார் தொல்காப்பியர். அவர் ஏழு திணையே கொண்டார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை.
வெட்சிப் படையினர் தம் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதைக் கண்டு இடைமறித்துப் போரிடுதல் கரந்தைத் திணையாகும். இது 14 துறைகளைக் கொண்டது.