Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.நொச்சித் திணை என்றால் என்ன?.தொல்காப்பியர் கூறிய புறத்திணைகள் ஏழனுள் நொச்சித் திணை என்பது அடங்காது. உழிஞைத் திணையிலேயே நொச்சித் திணைச் செய்தி ஒரு பகுதியாக வருகிறது. கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் இத்திணையாகும். பகைவன் மதிலை வளைப்பான். மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர். இதில் ஒன்பது துறைகள் உள்ளன.