தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    குறிஞ்சியும் வெட்சியும் பொருந்துமாற்றை விளக்குக.

    ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே' என்பார் தொல்காப்பியர். ஆநிரை கவர்தல் வெட்சி. ஆநிரை கவர்தல் அவை மேயும் குறிஞ்சி நிலத்தில் நிகழும். குறிஞ்சிக்குரிய உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகும். இது மற்றோர் அறியாமல் நிகழும். நள்ளிரவில் யாரும் அறியா வண்ணம் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் நிகழ்த்தும் காதல் ஒழுக்கமே குறிஞ்சிக்குரியது. அதே போல மாற்றான் நாட்டில் யாரும் அறியாமல் ஆநிரைகளைக் கவர்ந்து வருதல் வெட்சியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:13:47(இந்திய நேரம்)