Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.மருதமும் உழிஞயும் எவ்வாறு பொருந்தும்?‘உழஞை தானே மருதத்துப் புறனே’ என்பார் தொல்காப்பியர். போரிட்டுத் தோற்ற வேந்தன் தன்நாடு சென்று அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன்நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற் காலமாகும். மருத நிலத்தில் ஊடல் கொண்ட மகளிர் கணவன்மார்களுக்குக் கதவடைத்து விடுவர். தலைவன் விடியற்காலை வந்து ஊடல் தீர்த்து வீட்டில் நுழைவான். எனவே உழிஞை மருதத்துக்குப் புறனாயிற்று.