Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
10.நல்லியக் கோடனின் கொடையிற் சிறந்த கையைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை எவ்வாறு குறிப்பிடுகிறது?
கலைஞர்களின் திறன் அறிந்து பரிசில் வழங்கும் தன்மையாகிய 'வரிசை அறிதலில்' வல்லவன். திறமை இல்லாதவர்க்கும் 'இல்லை' என்று சொல்லாமல் ஈகை செய்யும் பண்பாளன்.
பெண் யானைக் கூட்டத்தைப் பரிசிலாக மழை போல் சிதறி வழங்கும் பெரிய கையை உடையவன். பல இசைக் கருவிகளையும் இசைக்கும் கலைஞர்களின் புரவலன் என்று இந்நூல் இவனைப் பாராட்டுகிறது.