Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
15.'மலைபடுகடாம்' - பெயர்ச்சிறப்பை எடுத்துரைக்க.
மலையை ஒரு பெரிய யானையாகவும், மலையில் எழும் பல்வகை இனிய ஓசைகளை யானையின் உடம்பில் மதநீர் பெருகும் போது, அதைச் சுற்றி வட்டமிடும் பலவகை வண்டுகளால் எழும் ஓசையாகவும், வண்டுகளின் தொல்லையால் யானையிடமிருந்து எழும் ஓசையாகவும் உருவகம் செய்துள்ளார். இதனால் இந்நூல் மலைபடுகடாம் (கடாம் = மதம்) என்ற பெயர் பெற்றது. இசைக்கலையைப் பற்றிய பாட்டுக்கு இசையோடு தொடர்புடைய பெயராக இது பொருத்தமாக அமைந்துள்ளது.