தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    9.

    பொருநர் பாலை யாழை மீட்டிப் பாலைப் பண் பாடும் போது என்ன நிகழும்?

    வழிப்பறி செய்யும் கள்வர்கள் வழியில் நடந்து செல்பவரைக் கொல்வதற்காகக் கையில் வில், வேல் முதலிய கொலைக் கருவிகள் வைத்திருப்பர். பாலைப் பண்ணைக் கேட்டால், அவர்களின் மனம் உருகி, இக்கொலைக் கருவிகள் கையிலிருந்து தாமாக நழுவிக் கீழே விழுந்து விடுமாம். அருளுக்கு மாறுபாடான கொலை வெறியும் அவர்கள் நெஞ்சை விட்டுக் கழன்று ஓடிவிடுமாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:16:01(இந்திய நேரம்)