Primary tabs
4.9 தொகுப்புரை
இலக்கியத் துறையில் மொழிபெயர்ப்பு தற்கால அளவில் நிறையப் பல்கிப் பரந்து பெருகியுள்ளது. அமைப்பு நிலைகளாலும் தனியாரின் ஆர்வத்தினாலும் மொழிபெயர்ப்புகள் பெருகின. தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழிபெயர்ப்புகள் வளம் சேர்த்த பாங்கினை இப்பாடம் விளக்கிச் சொல்கிறது.
•தமிழ்மொழி இலக்கிய வளத்திற்குப் பெரிதும் துணை நின்ற சூழலாக மொழிபெயர்ப்பைச் சொல்வது பொருந்தும்.•வடமொழியின் செல்வாக்கும், ஆங்கில இலக்கிய அறிமுகத்திற்குப் பிறகும் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு வீச்சும் வளம் சேர்த்துள்ளன.•தற்காலத்தில் இலக்கிய திறனாய்வு உத்திகள் முதலியன மொழிபெயர்ப்பின் வழியே தமிழில் இடம் பெற்றுள்ளன.