Primary tabs
-
1.6 சொல்லாக்கமும் பொருண்மை மாற்றமும்
‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ என்பது தொல்காப்பியர் கருத்து. எல்லாச்சொற்களும் காலத்தினுக்கேற்பப் பொருள் ரீதியில் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சொல்லாக்கத்தினால் உருவாக்கப்படும் சொற்களின் பொருள்கள், காலச் சூழலுக்கேற்ப மாற்றம் பெறுகின்றன.
தொடக்கத்தில் ஓர் ஆங்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் உருவாக்கப்படுகின்றது. அது நாளடைவில் எல்லா நிலைகளிலும் மாற்றம் பெறக்கூடியது என்பதனைப் பின்வரும் சான்றுகள் விளக்குகின்றன.
Alternative Current - ஆடலோட்டம்
மாறோட்ட மின்னோட்டம்
இருதிசை மின்னோட்டம்
மாறுதிசை மின்னோட்டம்Oxygen - ஆக்ஸிஜன்
பிராண வாயு
உயிர் வாயு
உயிர் வளிபொருண்மை அடிப்படையில் வெவ்வேறு சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்றாலும் இறுதியில் ஏதேனும் ஒரு சொல்லாக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது நிலை பேறாக்கம் எனப்படுகிறது.