தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லாக்க முறைமைகள்

  • 1.4 சொல்லாக்க முறைமைகள்

    தமிழில் இதுவரை நடைபெற்ற சொல்லாக்க முயற்சிகளைத் தொகுத்து ஆராய்ந்திடும்போது, அவை தோன்றுவதற்கான காரணிகள் பல உள்ளன. அவை சொல்லாக்க முறைமைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.

    • உள்ளடக்கம்

    ஒரு பொருள் உருவாக்கப்படுவதற்கு மூலமாக விளங்கும் மூலப்பொருளினை உணர்த்தும் வகையில் சொற்களை உருவாக்குதல் இவ்வகையில் அடங்கும்.

    எடுத்துக்காட்டு :

    மார்கோ, லிம்கா

    • செயல்

    செய்கின்ற செயலின் அடிப்படையில் புதிய சொற்களை உருவாக்குதல்.

    எடுத்துக்காட்டு :

    Mike
    -
    ஒலிவாங்கி
    Calculator
    -
    கணக்கீட்டுக் கருவி
    • இயல்பு

    ஒரு பொருள் அல்லது செயலின் இயல்பினை வெளிப்படுத்துதல்.

    எடுத்துக்காட்டு :

    Light House
    -
    கலங்கரை விளக்கம்
    Guide
    -
    வழிகாட்டி
    • நோக்கம்

        நோக்கத்தினை வெளிப்படுத்தும் வகையில் சொல்லாக்குதல்.

    எடுத்துக்காட்டு :

    நெற்றிக்கண், போலீஸ் செய்தி

    • அமைப்பு

    நூல் அமைந்துள்ள வடிவத்தினை முன்னிலைப்படுத்தும் வகையில் சொல்லாக்குதல்.

    எடுத்துக்காட்டு :

    உலா, கோவை

    • சிறப்பு

    சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் சொல்லாக்கப்படுதல்.

    எடுத்துக்காட்டு :

    சூப்பர்மேன், கற்புக்கரசி

    • பயன்பாடு

    எந்தப் பயன்பாட்டிற்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்பதனை அறிவிக்கும் வகையில் புதிய சொல்லினை உருவாக்குதல்.

    எடுத்துக்காட்டு :

    அலுவவர் மனமகிழ் மன்றம், மாணவர் கழகம்

    • குறியீடு

    கருப்பொருளினை நுட்பமாக உணர்த்தும் வகையில் குறியீட்டுச் சொல்லாக்கம் நடைபெறுகின்றது. இவ்வகைச் சொற்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, எதிர்நிலையாகவோ அமைந்துள்ளன.

    எடுத்துக்காட்டு :

    தங்கவேட்டை, வசூல்ராணி

    • சுருக்கம்

    நிறுவனங்களின் முதலெழுத்துகளைக் கொண்டு சுருக்கமாகச் சொல்லாக்குதல். அதுபோல இடப்பெயரினையும் சுருக்குதல்.

    எடுத்துக்காட்டு :

    த.மி.வா-தமிழ்நாடு மின்சாரவாரியம்
    புதுக்கோட்டை - புதுகை

    • புனைபெயர்

    ஏதேனும் ஒரு காரணம் கருதி, புனைபெயர் இட்டு வழங்குதல் மூலம் சொல்லாக்கம் இடம்பெறுகின்றது.

    எடுத்துக்காட்டு :

    சுந்தரராமசாமி
    -
    பசுவய்யா
    சுப்புரத்தினதாசன்
    -
    சுரதா
    • போலச் செய்தல்

    ஒரு சொல்லிலிருந்து இன்னொரு சொல்லை உருவாக்குதல் மூலம் சொல்லாக்குதல்.

    எடுத்துக்காட்டு :

    மேலாளர்
    வடமதுரை

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 14:01:02(இந்திய நேரம்)