Primary tabs
-
2. தலைவியின் ஊடலைப் போக்குவதற்குத் தலைவன்
கையாண்ட உத்தி எது?தலைவன்மீது தலைவி தான் கொண்டுள்ள ஊடலை வெளிப்படுத்த,
தலைவனோடு பேசாமலிருந்தாள். தலைவி தன்னுடன் பேசிவிட்டால்
ஊடல் தீர்ந்து விடும் என்று நம்பினான் தலைவன். அதற்கு ஓர்
உத்தியைப் பயன்படுத்தினான். தமிழ் மரபின்படி, யாராவது
தும்மினால் ‘நூறாண்டு வாழ்க’ என்று வாழ்த்துவர். தும்முபவர்களைப்
பார்த்துப் பேசாமலிருக்க முடியாது. எனவே, தான் தும்மினால்,
தலைவி தன்னை வாழ்த்துவாள். அப்பொழுது ஊடல் தீர்ந்துவிடும்
என்று நம்பி, தும்மினான் தலைவன்.