Primary tabs
-
4.0 பாட முன்னுரை
ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப்
பலரும் பலவிதமான விளக்கங்களைத் தரலாம். அரசியலாளர் ஒரு
விதமாகக் கூறுவர், சமுதாயவியல் அறிஞர்கள் இன்னொருவிதமாகக்
கூறுவர், பொருளியல் வல்லுநர்கள் வேறுவிதமாகக் கூறுவர்.
ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும்,
அனுபவத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு விதமான விளக்கங்களைக்
கொடுப்பார்கள். ஆனால், நாடு என்பது பற்றி வள்ளுவர்
குறிப்பிடும் கருத்துகள் எல்லாத் தரப்பினரும் ஒத்துக்
கொள்ளுகின்ற, எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும் வகையில்
அமைந்துள்ளன.ஒரு நாடு எவ்வாறு இருந்தால், அது நாடு என்று அழைப்பதற்குத்
தகுதி வாய்ந்தது என்பதைக் கருத்தில் கொண்டே வள்ளுவர் நாடு
என்பது பற்றி விளக்கம் கொடுக்கிறார்.