தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.4-தொகுப்புரை

  • 4.4 தொகுப்புரை

    முடியாட்சியினாலும், குடியாட்சியானாலும், ஒரு நாடு எவ்வாறு
    இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவர் பல கருத்துகளைக்
    கூறியுள்ளார். ஒரு நாட்டிற்கு விளைபொருளாகிய உணவும்,
    அழியாச் செல்வமும் முக்கியம் வாய்ந்தவை. அதைப்போல்,
    உள்பகையும் புறப்பகையும் இல்லாது ஒரு நாடு அமைந்திருக்க
    வேண்டும். நமது முயற்சி இல்லாமலே கிடைக்கக் கூடிய
    இயற்கை வளமும், நீர்வளமும் கிடைக்க வேண்டும். இத்தகைய
    தன்மை உடையதாக ஒருநாடு அமைந்திருக்க வேண்டும் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


    பயில்முறைப் பயிற்சி

    அன்பர்களே! வள்ளுவரின் கருத்துகள் காலம்கடந்து
    நிற்பவை. எக்காலத்திற்கும் ஏற்றவை என்று கூறுவர்.
    நாட்டைப்பற்றி இப்பாடத்தில் வள்ளுவர் கூறியிருக்கும்
    கருத்துகள் தற்காலச் சூழலுக்கு ஏற்புடையனவா? எனச்
    சிந்தியுங்கள்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1. ஒரு நாட்டில் எத்தகைய வளம்தேவை என்று
      வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
    1. நாடாவளம் பொருந்திய நாடு, நாடுகளுள் சிறந்த
      நாடு என்று ஏன் கூறப்படுகிறது?
    1. வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் வள்ளுவர்
      எதைப்பற்றிக் குறிப்பிடுகிறார்?
    1. ஒரு நாட்டின் உறுப்புகளாக வள்ளுவர் எவற்றைக்
      குறிப்பிடுகிறார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:13:58(இந்திய நேரம்)