தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l0-4.0 பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை
        தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்
    அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் பதினைந்து முதல்
    இருபத்தொன்றாவது வரை உள்ள அணிகள் இலேச அணி,
    நிரல்நிறை அணி, ஆர்வமொழி அணி, சுவை அணி,
    தன்மேம்பாட்டு உரை அணி, பரியாய அணி, சமாகித அணி
    ஆகிய ஏழுமாம். இவ்வணிகளின் இலக்கணங்களை இப்பாடத்தில்
    காணலாம். அவற்றின் வகைகளில் சிலவற்றையும் காணலாம்.
    ஏழு அணிகளையும்     அவற்றுக்கான எடுத்துக்காட்டுப்
    பாடல்களின் துணைகொண்டு இவ்வணிகளில் சில தமிழ்
    இலக்கியங்களில் பயின்று வருவதனைத் தக்க சான்றுகளுடன்
    காணலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:56:55(இந்திய நேரம்)