தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l0-5.0 பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை
        தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்
    அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் இருபத்திரண்டு முதல்
    இருபத்தேழாவது வரை கூறப்படும் அணிகள் உதாத்த அணி,
    அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக்
    கூட்ட அணி, விரோத அணி ஆகிய ஆறுமாம்.
    இவ்வணிகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் தண்டியாசிரியர்
    கூறும்போது முதற்கண் அதன் இலக்கணத்தைக் கூறுகிறார்.
    அவற்றின் வகைகளைக் கூறுகிறார். ஆறு அணிகளையும்
    அவற்றுக்கான எடுத்துக் காட்டுப் பாடல்களையும் இப்பாடத்தில்
    காணலாம். அப்பாடலில் அமைந்துள்ள அணிப் பொருத்தம்
    விரிவாக விளக்கிக் காட்டப்படுகிறது. இவ்வணிகளில்
    சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வருவதனைத்
    தக்க சான்றுகளுடன் காணலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:59:06(இந்திய நேரம்)