தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    தமிழ்நாட்டில் சங்க காலத்தில் அரசனது அரண்மனையிலும், அரசன் தங்கும் இடங்களிலும் வண்ண ஓவியங்களை வரைந்து வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சமய உணர்வு தமிழ் மக்களிடையே அதிகமானவுடன் ஆண்டவன் உறையும் கோயில்களிலும் சமயக் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் இடம் பெற்றன. இவை அன்றாடம் கோயிலுக்கு வருவோரையும் விழாக்களில் ஏராளமாகக் கூடும் மக்களையும் ஈர்த்தன. பல அரிய கருத்துகளைப் படிக்காத பாமர மக்களும் வண்ணக் காட்சிகள் வாயிலாக அறிந்து கொள்ளத் துணை புரிந்தது. தமிழ் நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய கோயில்களிலும் அதிக அளவில் ஓவியங்களைக் காண முடிகிறது. சைவ, வைணவ, சமண சமயத்தவர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களில் சமய வரலாற்றை விளக்கும் பழமையான ஓவியங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:22:00(இந்திய நேரம்)