தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

        சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடினர். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இம் மூவரும் இனிய பண்களில் பாடிய தேவாரப் பாடல்கள் மக்களுக்கு நல்வழி காட்டின. இனிய இசையோடு பாடும் தேவாரங்கள் நோய் தீர்க்க வல்லவை. என்றும் இம்மை மறுமைப் பலன் தருபவை என்றும் நம்பப்படுகின்றன.

        கால ஓட்டத்தில் பல தேவாரங்கள் மறைந்தன. இருந்தும் பெரும்பாலான பாடல்களை மீட்டெடுத்தான் சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன். தேவாரங்களைப் பண்ணோடு பாடத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஏற்பாடுகள் செய்தான். தலைமுறை தலைமுறையாக இவர்கள் வழி வந்தவர்கள் ஓதுவார் ஆவர். ஓதுவார்கள் 23 பண்களில் தேவாரம் பாடுவர். தற்போது தேவாரப் பண்ணிசைக் கச்சேரிகள் பொது அரங்குகளில் நடைபெறுகின்றன.

    1.
    தேவார மூவர் பெயர்களை எழுதுக
    2.
    திருநாவுக்கரசர் பாடல்களில் இடம் பெற்றுள்ள பண்கள் எத்தனை?
    3.
    ‘இசைஞானி’ என்று சேக்கிழாரால் பாராட்டப்பட்டவர் யார்?
    4.
    சம்பந்தர் தன் கடைசித் தேவாரப் பதிகத்தை எந்தப் பண்ணில் பாடினார்?
    5.
    அப்பர் பாடிய முதல் பண்ணின் பெயர் என்ன?
    6.
    சுந்தரர் பாடிய முதல் பண் என்ன?
    7.

    மறைந்த தேவாரங்களையும் பண்களையும் மீட்டெடுத்தவர் யார்?

    8.
    ஓதுவார் என்பவர் யார்?
    9.
    எத்தனை பண்களில் இன்று தேவாரம் பாடுகிறார்கள்?
    10.
    ‘யாழ்முரி’ என்னும் அபூர்வமான பண் பாடியவர் யார்?
    11.
    சுந்தரர் மட்டும் பாடிய தேவாரப் பண் எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:27:17(இந்திய நேரம்)