Primary tabs
-
பாடம் - 2
D06132 தேவாரப் பண்ணிசைஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தேவார நாயன்மார் என்று புகழ் பெற்ற திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இனிய பண்களில் பாடிய தேவாரப் பாக்களைப் பற்றிப் பேசுகிறது இப்பாடம். இம்மூவர் பாடிய தேவாரப்பாக்கள் தமிழ் வேதம் எனப் போற்றப்படுவதையும் குறிப்பிடுகிறது.
தேவார மூவர்க்கு முன்னோடியாக அமைந்த காரைக்கால் அம்மையார் பற்றியும் சுட்டுகிறது.
சம்பந்தர் ஞானப்பால் உண்டு முதல் தேவாரப் பாடல் பாடியதையும் பொற்றாளம் பெற்றதையும் குறிப்பிடுவதோடு அவர் ஆற்றிய அற்புதங்கள், திருநீற்றின் பெருமை முதலியவற்றையும் இப்பாடம் விரிவாகக் கூறுகிறது.
அப்பர் சமணராகிப் பின் சைவரானதும், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அவர் இறைவன் அருளால் எதிர்கொண்ட தன்மையும், அவர் நிகழ்த்திய அற்புதங்களும், அவருடைய உழவாரப் பணியும் விளக்கப்படுகின்றன.
சுந்தரரைத் தடுத்தாட்கொண்டதையும், பரவையாரை மணந்ததையும், அற்புதங்கள் நிகழ்த்தியதையும் குறிப்பிடுவதோடு திருக்கயிலையில் முக்தி பெற்றதும் சொல்லப்படுகிறது.
முதலாம் இராஜராஜன், நம்பியாண்டார் நம்பி மூலம் தேவாரப் பாடல்களை மீட்டெடுத்ததும் அவை ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்ட தன்மையும், அவற்றுக்குப் பண் அமைத்துக் கோயில்களில் பாடவைத்ததும் இடம் பெறுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தேவாரம் பாடியவர்கள்
யார் யார் என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.
- தேவார நாயன்மார்
வாழ்ந்த காலம் பற்றிய அறிமுகம்
ஏற்படுகிறது.
- தேவாரம் பாடிய
பின்னணியை இனங்காணலாம்.
- தேவாரப் பாடல்களையும்
பண்ணிசைகளையும்
மீட்டெடுத்தமை பற்றியும் அதற்கான
சூழலையும்
அடையாளங் காணலாம்.
- ஓதுவார்கள் பாடும்
தேவாரப் பண்ணிசையைச் சுட்டிக்
காட்டலாம்.
- கோயில்களில் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தேவாரப் பண்ணிசை இசைக்கும் காலச்சூழலை இனங்காணலாம்.
- தேவாரம் பாடியவர்கள்
யார் யார் என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.