Primary tabs
-
P20212 பக்தி இயக்கம்
தமிழகத்தின் தொன்மைச் சமயமான சைவம்
சிவபெருமான் என்னும் கடவுளைத் தலைமையாகக்
கொண்டது ஆகும். இச்சமயத்தின் தோற்றம் காலத்தால்
நிறுவமுடியாத பழமை வாய்ந்ததாகும். எனினும் கி.பி.2ஆம்
நூற்றாண்டிற்கு முற்பட்ட சங்க காலத்தில் இச்சைவ சமயம்
எந்த அளவில் இயங்கி வந்தது என்பதை அக்கால
இலக்கியங்களால் அறிய முடிகிறது. அதன்பின் கிடைக்கப்
பெற்றிருக்கின்ற இலக்கியச் சான்றுகளாலும், திருக்கோயில்
கட்டடச் சான்றுகளாலும், சமுதாயத்தில் வழங்கப்படுகின்ற கதைகளாலும் சைவ சமயத்தின் இயக்கம் தெரிய வருகிறது.சைவ சமயம் வளர்கின்ற பொழுது சமணம்,
பௌத்தம் உள்ளிட்ட சமயங்களும் தமிழகத்தில் இருந்தன.
அச்சமயங்களோடு போட்டியிட்டும் சைவ சமய இயக்கம்
வளர்ந்தது. மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகச் சைவம்
இருந்தாலும் பிற சமயங்களோடு போட்டியிட்டு வளரவும்
வேண்டியதாயிற்று. போட்டியோடு வளர்ந்த இயக்கச்
செய்திகளும் கிடைக்கப் பெறுகின்றன. இத்தகைய நிலையில்
காலங்காலமாகச் சைவ இயக்கம் எவ்வாறு இயங்கி வந்தது
என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகள் கொண்டும்
பக்தி இலக்கியச் சான்றுகள் கொண்டும் இப்பாடம்
விளக்கிச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- சங்க
இலக்கியங்களில் சைவ சமயத்தின் தொடக்க கால
இயக்கம் எந்தெந்த வகையில் இருந்தது என்பதை
அறியலாம். - தொன்மைக்
காலம் முதல் பிற சமயங்களோடு எவ்வாறு
போட்டியிட்டு வளர்ந்தது என்பதை அறியலாம். - சைவ
சமயப் பக்தி இயக்கம் பிற்காலச் சமய வழிபாட்டில்
வளர்ந்ததையும் அறியலாம். - தத்துவக்
கருத்துகளால் சைவ
சமய இயக்கம்
வளர்ந்ததையும் அறியலாம்.
- சங்க
இலக்கியங்களில் சைவ சமயத்தின் தொடக்க கால