தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமயநெறி, நடைமுறை வழிபாடு

  • P20214 சமயநெறி, நடைமுறை வழிபாடு


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

        சமயம் என்பது சமைக்கப்படுவது என்ற பொருளில்
    கடவுள் கொள்கைகளை வகுத்துரைப்பது ஆகும். இத்தகு
    நிலையில் சைவ சமயத்தின் கடவுள் கொள்கைகளாகிய
    நெறிகளையும், அச்சமயத்தின் நடைமுறை வழிபாட்டு
    முறைகளையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகின்றது. உலகச்
    சமயங்களில் தொன்மைச் சமயமான சைவ சமயத்தின்
    வழிபாடு உருவ வழிபாடாக அமைந்ததாகும். காணப்படாத
    சிவமாகிய கடவுளுக்கு அவனருள் பெற்ற ஞானிகள்
    உய்த்துணர்ந்த     வடிவத்தை அமைத்துச் சைவசமயம்
    வழிபடுகிறது. அவ்வழிபாட்டில் அமைந்த நெறிமுறைகளை
    இப்பாடம் குறிப்பிடுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • சைவ சமயத்தில் காலங் காலமாகப் பின்பற்றப் பெறுகின்ற
      நால்வகை நெறிகளை அறியலாம்.
    • உருவ வழிபாட்டின்வழி திருக்கோயிலில் அமைந்துள்ள
      சிவ மூர்த்தங்களை அறியலாம்.
    • மூர்த்தங்களுக்கு உரிய சிறப்பு வழிபாட்டு விழாக்களை
      அறியலாம்.
    • சைவ சமயத்தின் கடவுள் வழிபாட்டிற்குரிய சிவச்
      சின்னங்களை அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:25:12(இந்திய நேரம்)