தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆலத்தூர் கிழார்


ஆலத்தூர் கிழார்

112. குறிஞ்சி
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார்

350. பாலை
அம்ம வாழி-தோழி!-முன் நின்று,
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச்
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:05:44(இந்திய நேரம்)