Primary tabs
அம்மக்கள் அபயருசி, அபயமதி, யசோதரன் என்னும்பெயரினர் (என்று அபயருசி கூறினான்) என்க.
அபயமென்ற பதத்தை முன்னாலுடைய உருசி,அபயருசி. (யசோ. 25, 76) அபயமுன் மதி என்பதற்கும்இங்ஙனமே கூறிக்கொள்க. யசோதரன் என்பது, பாட்டன் பெயர். அவ்யசோதரனே இக்காப்பியத் தலைவன். (34)
(இ-ள்.) அரசிளங்குமரன் - யசோதரன், பரிமிசைபடை பயின்றும் -குதிரையேறிச் செய்யும் போர்த்தொழிலில்பழகியும். பார் மிசை தேர் கடாயும் - பூமியில் தேரைச்செலுத்தியும், வரிசையில் - முறைப்படி, கரிமேல் கொண்டும் -யானையேறிச் செய்யும் வேற்படை பயின்றும், வாள்தொழில்பயின்றும் - தரையில் நின்று செய்யும் வாட்போர் முதலியபோர்த்தொழிலில் பழகியும், மன்னர்க்கு உரிய அத்தொழில்களோடு - அரசருக்குரிய அப்போர்த்தொழில் பலவற்றோடு, கலைகளின் செலவை ஓர்ந்தும் - (அறுபத்து நான்கு) கலைஞானங்களின் முடிவையும் விளக்கமாக அறிந்தும், செல்நாள் -செல்லும் நாளில், அடுத்தது கூறல் உற்றேன் - நிகழ்ந்தவற்றை கூறலுற்றேன் (என்று அபயருசி கூறினான்).
யசோதரன் நாற்படையும் பயின்று பல்கலையறிவும் பெற்றானென்க.
யசோதரன் பருவமெய்திக் கலைகளை யுணர்ந்தானென்றமையின், அபயருசி, முன்னரே கலைகள் முதலியன உணர்ந்
*
தமிழிலுள்ள அச்சுப் புஸ்தகங்களில், இச்செய்யுளின் பின் நான்காஞ் சருக்கம் முடிந்தது என்று உளது. ஆயினும், ஓலைச்சுவடிகளில் அவ்வாறு இல்லை. முதனூலாகிய வடமொழியசோதர சரிதத்திலும் இல்லை. அவற்றைப் பின்பற்றி நூல்முடிவுவரை நான்காஞ் சருக்கமாகவே கொள்ளப்பட்டுளது.