தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 312 -
303. 
ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை
 
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும்
 
நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்
 
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான்.

   (இ-ள்.) மன்னன் - யசோமதி  யரசன்,  ஓர்  உயிர்த்தோழன் ஆகி - தனக்கு ஒப்பில்லாத உயிர்த்தோழனாகி, உறுதி சூழ் வணிகன்தன்னை -  நன்மையை   ஆராய்ந்து உரைத்த வணிகனை நோக்கி,  ஐய - ஐயனே, எனக்கு-அறிவிலியாகிய எனக்கு, ஆர் உயிர்க்கு அரணம் ஆயஅடிகளோடு-உயிர்கட்கு இரட்சகராகிய இம்முனிவரோடு,  நீயும் - ----, நேர்  - சமம்:  இறைவனாக நினைவல் - (உன்னையும்)  ஆசார்யனாகவே நினைப்பேன்,  என்று - --, இனிய கூறி  - இனிய மொழிகளைக் கூறி, பார் இயல் பொறையை - நிலத்தைச் சார்ந்த அரசபாரத்தினை,  நெஞ்சில் - மனத்தில்,  பரிந்தனன் ஆனான் - பற்றின்றி விட்டவனானான். (எ-று.)

நண்பனைப் புகழ்ந்து துறவு கொள்ளக் கருதினானென்க.

உயிர்த்தோழன் - உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரேயெனக் கூறத் தக்க நண்பன்.  உறுதி  சூழ்தல் - நல்லறத்தை ஆராய்ந்து கூறுதல்.  இறைவன் - ஞானசிரியன். நினைவல்: ‘அல்‘ தன்மை யொருமை விகுதி.   (84)

304. 
மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை
 
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய
 
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்
 
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.

(இ-ள்.) மன்னவன் - யசோமதி , மணிமுடி  - ரத்னகிரீடத்தை [அரச பதவியை], மகனுக்கு ஈந்து - தன் புதல்வனாகிய அபயருசிக்குக் கொடுத்ததனால்,  தன்னோடு - அவனோடு, ஏனை அணிமுடி அரசர்தாமும் - அழகிய முடியணிந்த மற்ற அரசர்களும்,  அவன் உயிர்த துணைவன் ஆய - அவனுக்கு உயிர்த்தோழனாகிய,  வணிகனும் - கல்யாண மித்திரனென்னும் வணிகனும், மற்றுளாரும் - மற்றும் பலரும், மாதவத்து இறையை




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:35:15(இந்திய நேரம்)