செந்தமிழ்க் காஞ்சி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
தமிழ் மொழியின் பெருமை சொல்லில் அடங்காதது. இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செழித்து வளரும் மொழி தமிழ்மொழி. இனியும் காலம் காலமாக நிலைத்து நிற்கும் மொழி தமிழ்மொழி. அந்த மொழியின் இலக்கண, இலக்கிய வலிமையும், வளமையும் அதனைக் காலந்தோறும் அழியாமல் காத்து வருகின்றன. அத்தகைய தமிழ் மொழியை அறிஞர்கள் பலர் போற்றியுள்ளனர்; வணங்கியுள்ளனர்; வாழ்த்தியுள்ளனர். அவ்வகையில் இப்பாடத்தில் பாவாணர் தமிழ் மொழியைப் போற்றிய, வணங்கிய, வாழ்த்திய முறையைக் காண உள்ளோம்.