7. செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்க் காஞ்சி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  தனியே பிறந்து தனியே வளர்ந்தது ---------- மொழி.

தனியே பிறந்து தனியே வளர்ந்தது தமிழ் மொழி.

2.  பாவாணரின் முழுப்பெயர் ---------

பாவாணரின் முழுப்பெயர் தேவநேயப் பாவாணர்.

3.  செந்தமிழ்க் காஞ்சி என்பது ஒரு --------- நூல்.

செந்தமிழ்க் காஞ்சி என்பது ஒரு கவிதை நூல்.

4.  ஓவியங்களில் சிறப்பானது -------- ஓவியம்.

ஓவியங்களில் சிறப்பானது தஞ்சாவூர் ஓவியம்.

5.  போர்வீரர்கள் போரின் காரணமாக இறந்தால்----------- வைப்பது தமிழர் மரபு.

போர்வீரர்கள் போரின் காரணமாக இறந்தால் நடுகல் வைப்பது தமிழர் மரபு.

6.  தமிழ்க் கலைகளை ஒரு காலத்தில் அழித்தது ----------

தமிழ்க் கலைகளை ஒரு காலத்தில் அழித்தது கடல்.

7.  தமிழ் --------- எழுத்து வடிவத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பெற்றுவிட்டது.

தமிழ் திருந்திய எழுத்து வடிவத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பெற்றுவிட்டது.

8.  தமிழ் இலக்கிய நூல்களில் சில ---------.

தமிழ் இலக்கிய நூல்களில் சில சிலப்பதிகாரம், மணிமேகலை.

9.  தமிழ்ச் சபையில் -------- இருந்து தமிழ் வளர்த்தார்.

தமிழ்ச் சபையில் முருகக் கடவுள் இருந்து தமிழ் வளர்த்தார்.

10.  தமிழ் மொழியின் தோற்றம் அறிஞர்களால் கணக்கிட முடியாத அளவிற்குப் -------- வாய்ந்தது.

தமிழ் மொழியின் தோற்றம் அறிஞர்களால் கணக்கிட முடியாத அளவிற்குப் பழமை வாய்ந்தது.