7. செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்க் காஞ்சி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  தமிழ் தமிழருடன் எவ்வாறெல்லாம் கலந்துள்ளது?

தமிழரின் உணர்விலும் உயிரிலும், அறிவிலும் தமிழ்மொழி கலந்துள்ளது.

2.  தமிழ்மொழி யாரைப் போன்ற பெருமை உடையது?

தமிழ்மொழி தாயைப் போன்ற பெருமையை உடையது.

3.  தமிழ்நாடு எந்த நாட்டுடன் பழங்காலத்தில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

எகிப்து நாட்டுடன் தமிழ்நாடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

4.  தமிழின் தனிச் சிறப்பு என்ன?

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து நிற்பது தமிழ் மொழி.

5.  நடுகல் என்பது என்ன?

போரில் இறந்த வீரருக்காக வைக்கப்பெறும் நினைவுச் சின்னம் நடுகல் எனப் பெறுகிறது.

6.  தமிழ்நாட்டின் சிறப்புகள் யாவை?

காவியம், ஓவியம், வணிகம், நாகரிகம், நடுநிலைதவறா அரசர்கள், புலவர்கள், வள்ளல்கள் வாழ்ந்த நாடு.

7.  தமிழில் உள்ள காவியங்கள் சிலவற்றைக் கூறுக.

சிலப்பதிகாரம், மணிமேகலை,பெரியபுராணம், கம்பராமாயணம்,வில்லிபாரதம், தேம்பாவணி.

8.  தமிழ்நாடு யாரை எல்லாம் வாழ்விக்கிறது?

தமிழ்நாடு தன்னை நாடி வந்தோரை எல்லாம் வாழ்விக்கிறது.

9.  தமிழ்நாட்டில் வாழ்ந்த கவிஞர்கள் சிலர் பெயரைக் கூறுக.

தமிழ் நாட்டில் வாழ்ந்த கவிஞர்கள் வள்ளுவர், கம்பர், காளமேகம் முதலியவர் ஆவர்.

10.  தமிழ்நாட்டு இலக்கியங்களின் பெருமைகளை எது ஏற்றுக் கொண்டுள்ளது?

தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.