செந்தமிழ்க் காஞ்சி
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. தமிழ்மொழியின் வளமைக்குக் காரணம் அதன் இலக்கண, இலக்கியங்கள்.
சரி
2. தாயை விட அரவணைப்பதில் சிறப்பு வாய்ந்தது தமிழ்மொழி.
சரி
3. தமிழ்மொழி ஆங்கில மொழியின் சார்பாலேயே பெருமை பெற்று வளர்ந்து வருகிறது.
தவறு
4. ‘தமிழுக்கும் அமுது என்று பேர்’ இதனைச் சொன்னவர் பாரதிதாசன்.
சரி
5. தமிழ்மொழி புதுமைகளை ஏற்பதில்லை.
தவறு
6. அகத்தியர் முதலான முனிவர்கள் தமிழ்மொழியை வளர்த்தனர்.
சரி
7. பாபிலோன் நகரத்துடன் தமிழர் பழங்காலத்திலேயே வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
சரி
8. கம்பர், காளமேகம் ஆகியோர் தமிழ்க் கவிஞர்கள்.
சரி
9. தமிழ்மொழி அரசனும் ஆகும்.
சரி
10. தமிழ்மொழி பழமையும், புதுமையும் உடையது.
சரி