முகப்பு |
பரணர் |
19. மருதம் |
எவ்வி இழந்த வறுமையர் பாணர் |
||
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று |
||
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து |
||
எல்லுறும் மௌவல் நாறும் |
||
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? |
உரை | |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர் |
24. முல்லை |
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர் |
||
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? |
||
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து |
||
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் |
||
குழைய, கொடியோர் நாவே, |
||
காதலர் அகல, கல்லென்றவ்வே. |
உரை | |
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர் |
36. குறிஞ்சி |
துறுகல் அயலது மாணை மாக் கொடி |
||
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், |
||
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என, |
||
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் |
||
தாவா வஞ்சினம் உரைத்தது |
||
நோயோ-தோழி!-நின் வயினானே? |
உரை | |
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர் |
60. குறிஞ்சி |
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் |
||
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன், |
||
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, |
||
சுட்டுபு நக்கியாங்கு, காதலர் |
||
நல்கார் நயவார் ஆயினும், |
||
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர் |
73. குறிஞ்சி |
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ; |
||
அழியல் வாழி-தோழி!-நன்னன் |
||
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய |
||
ஒன்றுமொழிக் கோசர் போல, |
||
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. |
உரை | |
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர் |
89. மருதம் |
பா அடி உரல பகுவாய் வள்ளை |
||
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; |
||
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?- |
||
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் |
||
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய |
||
நல் இயல் பாவை அன்ன இம் |
||
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர் |
120. குறிஞ்சி |
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு, |
||
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி |
||
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு |
||
அரியள் ஆகுதல் அறியாதோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர் |
128. நெய்தல் |
குண கடல் திரையது பறை தபு நாரை |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை |
||
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் |
||
சேயள் அரியோட் படர்தி; |
||
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர் |
165. குறிஞ்சி |
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, |
||
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை- |
||
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம் |
||
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள் |
||
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. |
உரை | |
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர். |
199. குறிஞ்சி |
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று |
||
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க் |
||
கை வள் ஓரி கானம் தீண்டி |
||
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் |
||
மை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
||
இன்றை அன்ன நட்பின் இந் நோய் |
||
இறு முறை என ஒன்று இன்றி, |
||
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே. |
உரை | |
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர் |
258. மருதம் |
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; |
||
அலராகின்றால்-பெரும!-காவிரிப் |
||
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த |
||
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, |
||
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை |
||
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், |
||
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் |
||
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. |
உரை | |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர் |
259. குறிஞ்சி |
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, |
||
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் |
||
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், |
||
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! |
||
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், |
||
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் |
||
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? |
||
நெஞ்சம் நன்றே, நின் வயினானே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர். |
292.குறிஞ்சி |
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை |
||
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு |
||
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை |
||
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், |
||
பெண் கொலை புரிந்த நன்னன் போல, |
||
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!- |
||
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென, |
||
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே. |
உரை | |
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர் |
298. குறிஞ்சி |
சேரி சேர மெல்ல வந்துவந்து, |
||
அரிது வாய்விட்டு இனிய கூறி, |
||
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் |
||
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!- |
||
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை |
||
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர் |
||
மடப் பிடிப் பரிசில் மானப் |
||
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே. |
உரை | |
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர் |
328. நெய்தல் |
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி |
||
அலவன் சிறு மனை சிதைய, புணரி |
||
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் |
||
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, |
||
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் |
||
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் |
||
புலி நோக்கு உறழ் நிலை கண்ட |
||
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. |
உரை | |
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர் |
393. மருதம் |
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் |
||
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, |
||
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் |
||
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் |
||
களிறொடு பட்ட ஞான்றை, |
||
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே |
உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர் |
399. மருதம் |
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க |
||
பாசி அற்றே பசலை-காதலர் |
||
தொடுவுழித் தொடுவுழி நீங்கி, |
||
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பரணர் |