32.
கரடு பெயர்த்தது
|
இதன்கண் : உதயணன் பிரச்சோதனன் வேண்டு
கோட்கிணங்கி அம்மன்னனுடைய பட்டத்தியானையாகிய நனாகிரி என்னும் களிற்றியானையின்
மதச்செருக்கை அடக்கி அதன்மேல் ஏறிச்செலுத்திப் பிரச்சோதனன் திருமுன் வந்து நிற்றலும்,
பிரச்சோதனன் உதயணனைக் கண்டு வியந்து அவனோடு அளவளாவுதலும், உதயணனும்
வாசவதத்தையும் தம்முள் ஒருவரையொருவர் நோக்கிக் காதலுறுதலும், அரசன் நளகிரியைப்
பற்றி உதயணனை வினாதலும், உதயணனும் வாசவதத்தையும் காமநோயான் வருந்துதலும், பிரச்சோதனன்
உதயணனுக்குச் சிறப்பியற்றலும், ஏவலர் உதயணன் பொருட்டுக் குஞ்சரச்சேரி மாளிகையில்
பலவேறு பொருள்களையும் தொகுத்து வைத்தலும், பிரச்சோதனன்பானின் றும் உதயணன் குஞ்சரச்சேரி
மாளிகையை எய்துதலும் பிறவும் கூறப்படும். |
|
5 |
..........................பொருள்புரி
நூலும்
அலகை சான்ற உலக புராணமும்
பலவகை மரபின் பாசண் டியர்கள்
சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும்
இசையொடு சிவணிய யாழின் நூலும்
நாடகப் பொருளும்....................
உப்பாற் பொருளும் உட்கொண்டு அடக்கி
உளப்பாடு உடைமை உதயணன் உரைத்தலும் |
உரை |
|
|
|
|
|
|
10 |
இனைத்தோர் இளமையொடு னைப்பல கேள்வியும்
தவத்தது பெருமையில் தங்கின இவற்கென
மருட்கை உற்றதன் மனம்புரிந் தருளி |
உரை |
|
|
|
|
|
|
15 |
எம்முடை யளவையில் பண்புறப் பேணி
நுன்பதிப் பெயர்க்கும் அளவையின்
நும்பியர்
நின்வழிப் படுகென மன்னவன் உரையாக்
குலங்கெழு குமரரைக் குற்றேல் அருளிக்
கலந்தவண் நின்ற கட்டுரைக் காலத்துத்
|
உரை |
|
|
|
|
|
|
20
25 |
தென்கடல் இட்டதோர் திருமணி
வான்கழி
வடகடல் நுகத்துளை வந்துபட் டாஅங்கு
நனிசேண் இட்ட நாட்டினர் ஆயினும்
பொறைபடு கருமம் பொய்யாது ஆ£கலின்
சிறைபடு விதியில் சென்றவள் குறுகி
மதியமும் ஞாயிறும் கதிதிரிந்து ஓடிக்
கடல்நிற விசும்பின் உடன்நின் றாங்குப்
பைந்தொடிச் சுற்றமொடு தந்தை தலைத்தாள்
ஆயத்து இடையோள் பாசிழைப் பாவை
யானை மிசையோன் மாமுடிக் குருசில்
இருவரும் அவ்வழிப் பருகுவனர் நிகழ |
உரை |
|
|
|
|
|
|
30 |
யாதனில் சிதைந்ததிவ் அடற்பெருங்
களிறென
வேழ வேட்டம் விதியின் வினாய
கதிர்முடி வேந்தன் கண்ணிய நுண்பொருட்டு
எதிர்மொழி கொடீஇய எடுத்த சென்னியன்
மன்னவன் முகத்தே மாதரும் நோக்கி
உள்ளமும் நிறையும் தள்ளிட கலங்கி
|
உரை |
|
|
|
|
|
35
40 |
வண்டுபடு கடாஅத்த வலிமுறை ஒப்பன
பண்டுகடம் படாஅ பறையினும் கனல்வன
விடற்குஅருந் தெருவினுள் விட்ட செவ்வியுடள்
துடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து
மதக்களிறு இரண்டுடன் மண்டி யாஅங்கு
இல்வழி வந்ததம் பெருமை பீடுறத்
தொல்வழி யத்துத் தொடர்வினை தொடர
வழுவில் போகமொடு வரம்பின்று நுகரும்
உழுவல் அன்பின் உள்ளம் தாங்கி
|
உரை |
|
|
|
|
|
45 |
இழையினுங் கொடியினும் இடியினும் பிணங்கித்
தேனினும் பாலினுந் தீஞ்சுவைத் தாகிக்
குலத்தினுங் குணத்தினுங் கூடிய அன்பினும்
இனத்தினும் பிறவினும் இவ்வகை இசைந்த
அமைப்பருங் காதலும் இமைப்பினுள் அடக்கி
ஒருவயிற் போல உள்ளழி நோக்கமொடு
இருவயின் ஒத்தஃ திறந்த பின்னர்த்
|
உரை |
|
|
|
|
|
50
55 |
தாரணி வேந்தன்
தலைத்தாள் நிகழ்ந்தது
காரண மாகக் காதல் தேறி
ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்திப்
பேர்த்தவன் வினவிய பெருங்களிற்று இலக்கணம்
போர்த்தொழில் வேந்தன்முன் பொருந்தக் காட்டி
நீல யானை நெஞ்சுபுக் கனன்போல்
சீல விகற்பம் தெரிந்தனன் உரைக்கலும்
அதுமுன் அடக்கிய மதியறி பாகரொடு
அங்கை விதிர்த்தாங்கு அரசவை புகழப்
|
உரை |
|
|
|
|
|
60
65
70 |
பைந்தொடிச் சுற்றமொடு பரிசனம் போக்கி
விழுநிதி அடுத்த கொழுமென் செல்வத்துக்
கணக்கரை வியன்நகர்க் கலவறை காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமின் ஈங்கெனப்
புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்பு உடுத்த நெடுநுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர்
அண்ணாந்து இயலா வான்றுபுரி அடக்கத்துக்
கண்ணி நெற்றியர் கைதொழூஉப் புகுதரக்
களிறுவழங்கு தடக்கையிற் காண்வரக் கொண்ட
வெள்ளேட் டங்கண் வித்தகம் எழுதிய
கடையெழுத்து ஓலைக் கணக்குவரி காட்டி
முன்னுறு கிளவியில் பண்ணுறப் பணிக்கலும்
|
உரை |
|
|
|
|
|
75
80 |
பன்மணி விளக்கும் பள்ளிக் கட்டிலும்
பொன்னின் அடைப்பையும் பூரண கலசமும்
கவரியும் கடகமும் கதிர்முத்து ஆரமும்
நிகரின் மாண்கல நிதியொடு நிறைந்த
ஆரியச் செப்பும் யவனமஞ் சிகையும்
பொன்செய் பேழையொடு பொறித்தாழ் நீக்கி
நன்கனம் படுத்து நகுமலர் பரப்பி
விரைவிரி யாளர் புரைவுறப் புணர்த்த
பண்டம் புதைத்த வண்டுபடு வளநகர்
|
உரை |
|
|
|
|
|
85 |
மடையரும் மகளிரும் மல்லரும் அமைச்சரும்
கடையரும் கணக்கரும் காப்பரும் உளப்பட
இறைவினை திரியாப் பழவினை யாளரை
வழிமுறை மரபில்தம் தொழின்முறை நிறீஇ
வாய்மொழி விதியின் மேவன எல்லாம்
நோக்கி மன்ன நுவல்அருங் காப்பின்
அணிந்தது நகரெனப் பணிந்தவர் உரைக்கலும்
|
உரை |
|
|
|
|
|
90 |
குஞ்சரச் சேரிக் குமரற்கு இயற்றிய
வெண்சுதை நல்லில் உறையுள் ஆக
இடம்புகு தக்கன்று இருத்தல் நெடிதெனப்
பேரியல் வையம் பின்செல அருளி
வீரிய வேந்தன் விடுத்துஅகம் புக்கபின்
|
உரை |
|
|
|
|
|
95
100 |
விட்டுஉழல் யானை அச்சம் நீக்கி
வெறிகோள் பண்ணியும் தொழில்தலைப் பெயர்த்தவன்
கலிகொ ளாவணம் கைதொழப் போகி
அரைமதி இரும்பொடு கவைமுள் கரீஇ
பீலி சுற்றிய வேணு வெண்காழ்
யானை இளையாரைத் தானத்துப் பிணிக்கெனத்
தகைமலி வேழம் தலைக்கடை இழிதந்து
அகம்புக் கனனால் அரசவை விடுத்தென்.
|
உரை |
|
|
|
|