தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு அழகிய மணவாளம் பாச்சில் அமலேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

அழகிய மணவாளம்

ஊர் :

கோபுரப்பட்டி

வட்டம் :

லால்குடி

மாவட்டம் :

திருச்சி

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

பாச்சில் அமலேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

கோபுரப்பட்டி சிவன் கோயில், பெருங்குடி சிவன்கோயில்

சுருக்கம் :

இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. உத்தமசோழனால் கி.பி.975-இல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இவ்வூர் கல்வெட்டுகளில் பாச்சில் என்றும், ஊர்ப்பிரிவு மழநாட்டு ராஜாஸ்ரய வளநாட்டு பாய்ச்சில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சிற்பங்கள் எதுவும் இக்கோயிலில் காணப்படவில்லை. இக்கோயிலின் அருகிலுள்ள கோபுரப்பட்டி சிவன் கோயிலுக்கு இக்கோயில் துணைக்கோயிலாக இருந்து வந்துள்ளது எனத் தெரிகிறது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / உத்தம சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

இக்கோயில் கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. உத்தம சோழன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகிய சோழமன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டில் இக்கோயில் உத்தமசோழனால் கி.பி.975-ல் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. முற்காலச் சோழர்களின் கட்டடக்கலைப் பாணியைக் கொண்டுள்ள இக்கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் பாச்சில் என்றும், ஊர்ப்பிரிவு மழநாட்டு ராஜாஸ்ரய வளநாட்டு பாய்ச்சில் என்றும் குறிக்கப்படுகிறது.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

இக்கோயிலில் கருவறை தாங்குதளத்தில் விமானத்தைத் தாங்குகின்ற யானை வரிசை, சிம்ம வரிசை இவைகளைத் தவிர வேறு சிற்பங்கள் எதுவும் கோட்டங்களில் காணப்படவில்லை. காலவோட்டடத்தில் மறைந்துவிட்டன போலும்.

கோயிலின் அமைப்பு :

உத்தமசோழனால் கி.பி.975-இல் கட்டப்பட்ட இக்கோயில் கருவறை, இடைநாழிகை (அந்தராளம்), அர்த்தமண்டபம், முகமண்டபம் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறைச் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் கூட காணப்படவில்லை. தேவகோட்டங்களும் இல்லை. எனவே எந்தவித சிற்பங்களும் காணப்படவில்லை. பாச்சில் மேற்றளி என இக்கோயில் வழங்கப்படுகிறது. இவ்வூரான பாச்சிலுக்கு மேற்கில் உள்ள தளி ஆதலால் இவ்வாறு மேற்றளி என்று அழைக்கப்படுகிறது. பாச்சில் ஊரில் கிழக்கில் கோபுரப்பட்டி சிவன் கோயில் அமைந்துள்ளது.

அமைவிடம் :

அழகிய மணவாளம் பாச்சில் அமலேஸ்வரர் கோயில், கோபுரப்பட்டி-621 005, திருச்சி

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி-திருப்பைஞ்ஞீலி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும் சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் லால்குடி வட்டத்தில் இக்கோயில் அமைந்து உள்ளது. இவ்வூருக்கு மண்ணச்சநல்லூர் வழியாக செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

திருச்சி, மண்ணச்சநல்லூர்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி

தங்கும் வசதி :

திருச்சி விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:41(இந்திய நேரம்)