தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு எசாலம் இராமநாத ஈஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

இராமநாத ஈஸ்வரர்

ஊர் :

எசாலம்

வட்டம் :

விக்கிரவாண்டி

மாவட்டம் :

விழுப்புரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

இராமநாத ஈஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

திரிபுரசுந்தரி

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

பிரம்மதேசம், எண்ணாயிரம் சிவன்கோயில்கள்

சுருக்கம் :

முதலாம் இராஜேந்திரன் சோழனின் கற்றளியான எசாலம் இராமநாதஈஸ்வரர் கோயிலில் 23க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 4 மணிகள், தூபக்கால் ஒன்று ஆகியவை எழுத்துப்பொறிப்புகளுடன் இக்கோயிலின் வளாகத்தில் புதையுண்டிருந்தன. மேலும் முதலாம் இராஜேந்திர சோழனால் வெளியிடப்பெற்ற எசாலம் செப்பேடுகளும் கண்டறியப்பட்டன. இவையாவும் பாதுகாப்புக் கருதி பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன. புதைக்கப்பட்ட விதத்தை நோக்குங்கால் செப்புத் திருமேனிகளுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாதவாறு ஆற்றுமணலைக் கொண்டுவந்து குழியில் கொட்டி அதன் நடுவே இந்த செப்புத் திருமேனிகளும், செப்பேடுகளும் புதைக்கப்பட்டிருந்தன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இக்கோயில் உள்ளது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

முதலாம் இராஜேந்திர சோழனால் கி.பி.1036-இல் வெளியிடப்பட்ட எசாலம் செப்பேடுகள் இக்கோயிலிருந்து எடுக்கப்பட்டன. இராஜேந்திரனது கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

தெற்குப்புறத்தில் தளம் கோட்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் உள்ளார். மேற்குப்புறத்தில் தளம் கோட்டத்தில் திருமால் அமர்ந்த நிலையில் உள்ளார். வடக்கு தளம் கோட்டத்தில் நான்முகன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். தேவகோட்டங்களில் மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் உள்ளனர். அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் கணபதியும், வடபுறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அமைந்துள்ளனர். 23-க்கு அதிகமான செப்புத் திருமேனிகள் இக்கோயிலில் அகழ்ந்தெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இராஜேந்திர சோழன் காலத்தவை. அவற்றுள் பைரவர், கணபதி, துர்க்கை, சிவன், பார்வதி, தூபக்கால் ஆகியன குறிப்பிடத்தக்கன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் ஒரு தளத்தை உடைய கற்றளியாகும். வேசரபாணியில் அதாவது வட்டவடிவத்தில் கருவறை விமானத்தின் தலைப்பகுதி அமைந்துள்ளது. தாங்குதளம் முதல் கலசம் வரை கற்றளியாக அமைந்துள்ளது. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், அம்மன் திருமுன் ஆகிய அமைப்புகளைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தில் சோழர் கால தூண்கள் அழகு செய்கின்றன.

அமைவிடம் :

அருள்மிகு இராமநாத ஈஸ்வரர் திருக்கோயில், எசாலம்-605 203, விக்கிரவாண்டி, விழுப்புரம்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை

செல்லும் வழி :

விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் எசாலம் ஊர் அமைந்துள்ளது. விக்கிரவாண்டியிலிருந்தும் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

விக்கிரவாண்டி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

பேரணி, விக்கிரவாண்டி

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

விழுப்புரம் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:53(இந்திய நேரம்)